சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

துரத்தும் நிழல்களின் யுகம்

10 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
-------------------------------
எது எனது நிழல்
எது உனது நிழல்

நிழல்களின் கருமையாய் படர்ந்திருக்கும்
எல்லையற்ற மவுனத்தின் மீது
புழுதியாய் எழும் வார்த்தைகளின் நெடியை
துரத்திவரும் மிருகத்தின் நிழல்
எம் நிழல்களுக்கிடையில்

நானொரு பறவையை வரைந்தேன்
அது போராயுதமாயிற்று
அதன் நிழல் என் உறக்கங்களிலிருந்து
என்னைத் துரத்துகிறது

நிழல்களின் மவுனம் கொடியது
துர்க்கணங்களாய் நீளும் அனாதரத்தருணங்களில்
சலனமெழுப்பி நுழைந்து பின் இருளாய் உறைகையில்
நிழல்களின் மவுனம் கொடியது

நிழல்கள் துரத்தும் நகரங்களிலிருந்தும்
வனங்களிலிருந்தும் வரும் மனிதர்களின் பின்னால்
ஆயிரம் நிழல்கள் தொடர்கின்றன

நிழல்
நிழல்
பறவைகளின் குரலின் நிழல்
குழந்தைகளின் சிரிப்பின் நிழல்
காலமாகிய மனிதனின் கடைசிச் சொல்லின் நிழல்
எல்லாமே அச்சமூட்டுவன

நிழல்களால் நிறைந்த இவ்யுகத்தில்
ஒரு பூவையோ
பறவையையோ வரைந்திட முடிவதில்லை

நிழல்களின் நிரந்திரத்தின் மேல் அதிர்கின்ற குரல்
நிழல்களை எழுப்பி பெருநிழலாய் வளர்கிறது

மிகவும் கொடியது
உறக்கத்தின் நடுநிசியில் கனவுகளை
உதறியெழ வைக்கும் சப்பாத்துகளின் நிழல்கள்

நிழல்களுக்கிடையில்தான்
நீயும் நானுமாகத் தூங்குகிறோம் நிழல்களோடு

3 comments:

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

நிழல்களைப் பற்றிய கவிதையெனினும் நிஜத்தினைச் சொல்லி உறைய வைக்கிறது அழகிய வரிகள்.
அருமையான கவிதை சித்தாந்தன்..!

10 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 11:00
சித்தாந்தன் சொன்னது…

அன்புடன் ரிஷான்

உங்கள் கருத்துக்கு நன்றி.
நிழல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட
நகரதத்தில் வாழ்பவனின் குரலாகவே
இந்த கவிதைகள் காணப்படுகின்றன.

தொடர்ந்தும்
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

அன்புடன்
சித்தாந்தன்

14 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 10:52
சித்தாந்தன் சொன்னது…

அன்புடன் ரிஷான்

உங்கள் கருத்துக்கு நன்றி.
நிழல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட
நகரதத்தில் வாழ்பவனின் குரலாகவே
இந்த கவிதைகள் காணப்படுகின்றன.

தொடர்ந்தும்
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

அன்புடன்
சித்தாந்தன்

14 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 10:52

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்