சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

பிணக்காட்டிலிருந்து திரும்பும் அரசன்

10 ஜனவரி, 2010

சித்தாந்தன்
....................................................
தொண்டை கிழியக் கத்தி ஓயந்தவன்
வந்திருக்கிறான் சபைக்கு
சன்னங்களாலான அவன் குரலில்
பிணங்கள் மணக்கின்றன

ஏக தொனியில் கட்டளையிட்டவனின்
முன்னால்
புலன்கள் செத்த மனிதர்கள் முண்டியடிக்கிறார்கள்
சாவுகளால் வனையப்பட்ட
மட்பாண்டத்தின் வாய்வழியாக
நுரைத்தெழுகின்றன கனவுகள்

பிச்சை கேட்பவனின் முகத்தை அணிந்தபடி
வந்திருக்கின்றான் தெருவுக்கு
கபாலங்களாலான மாலையில்
பூக்களைச் சூடியிருக்கிறான்

கனிவைச் சாயமாகத் தடவிய
வாக்குறுதிகள் மரங்களாய் வளர்கின்றன
வாய்பிளந்து காத்திருக்கின்றனர் மனிதர்

கட்டளைகளால் நிரம்பும் அவன் மூளையில்
முளையிடுகின்றன எண்ணற்ற பொய்கள்

அழிவுகளைப் பதட்டமில்லாமல்
பார்த்திருந்த நாட்களுக்கு
தானுருத்துடையவனில்லையெனச் சத்தியம் செய்கிறான்

செவிகள் யாவும்
அவனை நோக்கிக் குவிந்திருக்கின்றன
தோரணங்கள் தொங்கும் வீதிகளில்
கபாலத்தைத் தொலைத்த மனிதருக்காக
கொட்டுகிறான் புன்னகைகளை

தோற்றுப்போன மனிதர்களின் முன்னிருக்கும்
மட்பாண்டத்தில்
நோதித்து நாறுகின்றன
பழக்கப்பட்ட வாக்குறுதிகள்

2 comments:

Theepachelvan சொன்னது…

அன்பின் சித்தாந்தன்

அந்தக் கவிதையின் தாக்கம் எனக்கும் ஏற்பட்ட தாக்கம். இந்த நிகழ்வு குறித்து அல்லது பாதிப்பு குறித்து ஒரு பதிவை எழுதியிருக்கிறேன். பதிவுகள் மொழியிலும் சொல்லுகிற முறையிலும் வேறு படுகின்றன.

ஆனால் 'அரசன்' என்ற படிமம் நமக்குள் தருகிற தாக்கம் ஒன்றாகவே இருக்கிறது. நமது காலம் புன்னகை எல்லாவற்றையும் அதனிடத்தில் நாம் பலியிட்டிருக்கிறோம். தொடர்ந்து இந்தப் படிமம் சாபமாக தொடருகிறது.

"அழிவுகளைப் பதட்டமில்லாமல்
பார்த்திருந்த நாட்களுக்கு
தானுருத்துடையவனில்லையெனச் சத்தியம் செய்கிறான்

...

தோற்றுப்போன மனிதர்களின் முன்னிருக்கும்
மட்பாண்டத்தில்
நோதித்து நாறுகின்றன
பழக்கப்பட்ட வாக்குறுதிகள்"

என்னை இந்த வரிகள் மிக பாதிக்கின்றன.

29 ஜனவரி, 2010 அன்று PM 10:34
சித்தாந்தன் சொன்னது…

உண்மைதான் தீபச்செல்வன்

அரசு என்பதை நாம் அறிந்து கொண்ட காலத்திலிருந்து வன்முறையின் உருவாகவே கண்டு வருகின்றோம். அது எப்போதும் அதிகார மையமாகவே இருந்து வருகின்றது. நாம் சந்திக்கும் நெருக்கடிகளும் துயரங்களும் இவ்வாறுதான் சிந்திக்கத் தூண்டுகின்றன.
அரசு அல்லது அரசன் என்பதன் அர்த்தம் எங்களுக்குள் ஏற்படுத்தும் அனுபவம் ஒத்த வகையிலமைவதை நானும் புரிந்து கொள்ளுகின்றேன்

30 ஜனவரி, 2010 அன்று AM 9:23

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்