சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

பூனைப் பதிகம்-1

04 அக்டோபர், 2015


ஆழ இறங்கிச் செல்கின்றேன்
காலங்கடந்து வந்து சேர்ந்த புத்தகங்களுக்குள்.
மொழியே ஒரு சிலந்தியாகி
மூளையில் வலை பின்னுகிறது.
எழுத்தும் சொல்லும் பொருளுமென
விரியும் அதிகாரங்களில்
மனனம் செய்யவியலா வார்த்தைகள் தொங்குகின்றன.
ஆதி புனைவுகளின் கதைகளில்
பெரும் படைசூழ உலாப் போகும்
அரசர்களின் பின்னே என்னால் தொடரமுடியவில்லை.
காதலும் காமமும் நிரம்பிய
கவிதைகள் யாவிலும் அருவமாய் ஊர்கின்றன
ஆயிரமாயிரம் பொய்த்தேள்கள்.
விடுபடலாம்
ஒரு வார்த்தையை விடவும் சிறியது
பெருங்கடல்.
பெருங்கடலை விடவும் சிறியது
பெருவெளி.
இதற்கு மேல் எதுவுமில்லை.
ஊர்கின்றேன்
ஊர்ந்து ஊர்ந்து
ஊள்ளொளி பெருக்குகின்றேன்.
உள்ளொளி பெருக்கி
யாவுமற்று வீழ்கின்றேன் பாற்கடலில்
ஒரு பூனையாய்.
02.03.2014
00
இன்றுதான் புதைகுழிகளிலிருந்து
மனிதர்கள் மீண்டெழுந்தனர்.
இரத்தமும் சதையுமற்று
தாடைவரைவிரிந்தபற்களில்
அவலத்தைச் சூடியிருந்தனர்.
கண்ணீர் இருக்கவில்லை
வார்த்தைகள் பேசவில்லை
ஆனபோதும்
கரியாய் உறைந்தகாலத்தின் வடுக்களை
மொழிகடந்தசொற்களில்
சொல்லத் தொடங்கினர்.
காலம்
கழிவறைக் குழியில் நாறத்தொடங்கியபின்
நாவற்ற இலட்சம் ஆன்மாக்களின்
கதைகளிலிருந்து
ஒருமலரைத்தானும் பறிக்கமுடியவில்லை.
யாவுமேகதைகளானபின்
புதைகுழிகளின் மேல்
மழைபெய்தாலென்ன
சூரியன் படுத்துறங்கினால் என்ன
ஆனபோதும்
கள்ளிச் செடிகளும் மலராக் காலத்தில்
சொற்களையும் கடந்து நீள்கின்றது
கதைகளின் துயரம்.
00
வெறுமையின் மீது வலி நெய்யும் பாடல்.
.......................................................................
எதைக் கொண்டு
இந்த வெற்றிடத்தை நிரப்ப
எல்லா இன்மைகளிலும்
தனித்தலையும் பறவையின்
சிறகொலியினாலா
இரவின் கருமை தடவிய கணங்களில்
மௌனித்திருக்கும் இலைகளின்
பரிபாஷையினாலா
வெறுமனே கல்லிடுக்குகளுக்குள் இருந்தவாறு
கத்தித் தொலைக்கும் தவளைகள்
மழையின் அழகிய தருணங்களையும்
பசை நாக்கினால் இழுத்து ஒட்டுகின்றன
இது காலத்தின் வெற்றிடமாய்
எஞ்சியருக்கிறது
யாரோ ஒருவன்
இதன் வெறுமையின் மீது
வலி நெய்யும் பாடலை மீட்டுகின்றான்
வெற்றிடத்தின் மேலாய்
பறக்கும் பறவைகளின் நிழல்கள்
அசையும் கருந்துயராய் நீள்கின்றன
நிரவி அடைக்கவியலா வெற்றிடத்தை
சொற்களால் துயரெழுப்பிச் சூழ்கின்ற
எண்ணற்ற குரல்களையும்
கௌவித் தின்கின்றது காத்திருந்த மிருகம்.
00
வலியுணர்தல்
.......................................
சரி செய்யப்படாத பிரச்சினைகளால்
நிறைந்திருக்கும் அறையில்
நீயும் நானும் தனித்திருக்கின்றோம்
புதிதாகக் கொண்டுவரப்பட்ட நிலைக்கண்ணாடி
பலமுறையும் புறக்கணிக்கிறது என் பிம்பத்தை
முழுமையும் சிதறிய குளிர் நீர்
ஆவியாகத் தொடங்கிவிட்டது
உஷ்ணமான மூச்சால் நிறைகிறது அறை
நீ சூசகமாய்த் தவிர்க்கும்
என்னுடலின் தவிப்பைத் தின்று தொலைக்கின்றன
சுவரில் புணரும் பல்லிகள்
உனது ஆழ்ந்த உறக்கத்தின் மூச்சொலி
துரத்திச் செல்கிறது
விடுபட்ட நாட்களின் வார்த்தைகளை
அறையை மூடியிருக்கிறோம் நாம்
அல்லது
நம்மை மூடியிருக்கிறது அறை
சாவித் துவாரத்தின் வழி
வெளியேறிச் செல்கிறது காற்று
புணர்ந்து களைத்து நகர்ந்த பல்லிகளின்
வெறுமையினிடத்தில்
தெறித்து வழிகிறதென் சுக்கிலம்
00
நினைவையுறுத்தும் ஒற்றைச்சொல்
........................................................................
விலக்கப்பட்டவனின் இரவு
முட்களில் வீழ்ந்துகிடக்கிறது
அவன்
தனது நூறாவது கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறான்
பறவைகளின் தாகம்
அதில் வற்றிப்போயிருக்கிறது
பிளவுண்ட ஆறுகளின் சுனைகள்
அடைபட்டிருக்கின்றன
அவன் எழுதிக்கொண்டேயிருக்கிறான்
பகலின் நிர்வானம்
கவிதையில் மிதக்கின்றது
ஆயிரக்கணக்கான பிணங்களை
இழுத்துக் கொண்டு
ஒரு காலம் ஊர்ந்து கடக்கிறது
அவனின் நூறாவது கவிதை
மௌனங்களைத் தின்று
ஒரு சொல்லடுக்காய் நீள்கின்றது
கருணைகூர மறந்த நாட்களை
இன்னும் நினைவுகளில் தேக்கிக்கொண்டு
ஒரு சருகைப் போல
வெளி முழுதும் படர்கிறது
கவிதையிலிருந்து தவறிய ஒற்றைச்சொல்
00

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்