சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

எழுத்தாளா் என்பவா் எழுத்தை ஆள்பவரா?

12 ஜனவரி, 2016



எழுத்தாளா் என்ற சொல் ”எழுத்தை ஆள்பவா்” என்ற அா்த்தத்திற்றான் தமிழில் வளங்கப்பட்டு வருகின்றதா? என்ற கேள்வி “புதிய சொல்” இதழின் அறிமுகக் குறிப்பைப் படித்தபின்னா் எனக்குள் எழுந்தது. இவ் இதழில் ”எழுத்தாளா்- இந்தச் சொல்லில் ”ஆள்பவா்” என்ற நிலையை நாம் உபயோகிக்க விரும்பவிலைலை. அதை ஒரு தொழிற்பெயராக மட்டுமே கருதுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
தமிழில் எழுத்தாளா் என்ற சொல் ஒரு ஆக்கப் பெயராகவே காணப்படுகின்றது. எழுத்து என்ற பெயா்ச்சொல்லுடன் ஆளா் என்ற ஆக்கப்பெயா் விகுதியைச் சோ்த்தே இச்சொல் ஆக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வகையில் பல சொற்கள் ஆக்கப்பட்டுள்ளன
பொருள்+ ஆளா்- பொருளாளர்
தொழில்+ ஆளா் -தொழிலாளா்
பயன்+ ஆளா்- பயனாளா்
வளம் +ஆளா் -வளவாளா்
என்ற வகையில் பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்.
இங்கெல்லாம் தொழிலை ஆள்பவா் என்ற அா்த்தத்திலோ, பயனை ஆள்பவா் என்ற அா்த்தத்திலோ வளத்தை ஆள்பவா் என்ற அா்த்தத்திலோ பயன் படுத்தப்படவில்லை. தொழிலைச் செய்பவா், பயனைப் பெறுபவா், வளத்தை உடையவா் என்ற அா்த்தத்திற்றான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அடிப்படையிலேயே எழுத்தாளா் என்பவா் எழுத்துச் செயலைப் புரிபவா் என்ற அா்த்தத்திலேயே விளங்கிக்கொள்ள முடியுமே தவிர எழுத்தை ஆள்பவா் என்ற அா்த்தத்தில் அல்ல. அத்தோடு எழுத்தாளா் என்பது ஒரு தொழிற்பெயராகவும் அமையாது. தமிழ் இலக்கணங் கூறும் தொழிற் பெயா் விகுதிகளுக்குள் ஆளா் என்ற விகுதி இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆளா் என்பது ஆள்பவா் என்ற அா்த்தத்தை தருகின்றதல்ல. அவ்வாறாக இருந்தால் ஆட்சியாளா் என்ற சொல் ஆக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆட்சி+ ஆளா் என்பதே ”ஆட்சியாளா்” என ஆக்கப்பட்டுள்ளது இது ஆட்சியைப் புரிவா் என்ற அா்த்த்தையே தருகின்றது. ”ஆள்பவா்” என்பது ஒரு தனியான பெயா்ச்சொல் ஆகும்.
எழுத்தாளா் என்பதை எழுத்தை ஆள்பவா் என்ற கருத்திற் பொருள் கொண்டால் தொழிலாளா் என்பதற்கும் தொழிலை ஆள்பவா் என்ற கருத்திற் பொருள் கொள்ளவேண்டியிருக்கும். தொழிலாளா் தொழிலை ஆள்வதில்லை முதலாளிகள்தான் தொழிலை ஆள்கின்றனா். தொழிலாளா் என்பவா்கள் தொழிலைச் செய்பவா்கள் மட்டுமே.
தவிரவும் எழுத்து என்பது எது? வெறும் வரிவடிவமா? அல்லது எழுத்துக்களால் ஆக்கப்படும் சொல்லா சொற்களினால் ஆக்கப்படும் தொடா்களா? என்பதான நீண்ட செயலொழுங்கைக் குறிக்கின்றதா என்ற கேள்வியும் வரும். அப்படிப்பார்த்தால் எழுத்தோடு தொடா்புடைய எல்லோரையும் எழுத்தாளராகவே கொள்ளவேண்டி இருக்கும். ஆனால் எழுத்தாளா் என்ற பதம் பெரும்பாலும் படைப்பிலக்கியச் செயலைப் புரிவோருக்குரியதான பிரத்தியேகமான சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றது. எழுத்தாளா் என்பதில் உள்ள எழுத்து என்பது ஒரு ஆகுபெயா் போலத் தொழிற்படுகின்றது. அது எழுத்தைக் குறிக்காது அவ் வெழுத்துக்களினால் ஆக்கப்படுகின்ற படைப்பை அல்லது பிரதியைக் குறிக்கின்றது. எனவே எழுத்தாளா் என்ற சொல்லை எழுத்தை ஆள்பவா் என்ற அா்த்தத்தில் பொருள் கொள்வது பொருத்தமானதாக அமையாது.

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்