சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

லிஸா

14 மார்ச், 2012


நேபாள மூலம் - கீதா திரிபதி
ஆங்கிலத்தில் - மானு மஞ்ஜில்
தமிழில்-
சித்தாந்தன்
...............................

அழகான ஒருநாள்
லிஸா என்னைக் கேட்டிருந்தாள்
“யார் நல்லவர்
அம்மாவா? அப்பாவா?”
அவளின் முகத்தைக் கூர்ந்தபின்
நான் சொல்லியிருந்தேன்
“இருவரும் நல்லவர்கள்”

அவளைக் காண வீட்டுக்கு வந்திருந்த
ஒருசோடி மாடப் புறாக்களை நம்பியதைப் போலவே
அந்த நாளில்
நான் சொன்னதையும்
அப்படியே நம்பியிருந்தாள்

பிறகொருநாள்
நான் அவளுக்குக் கற்பித்தேன்
“வாழ்க்கை சூரியனும் நிழலும் சேர்ந்ததாயிருக்கிறது”

ஏதொவொரு தகிக்கும் நாளில்
லிஸா
பாலைவன அனலில் மூச்சுத் திணறியபடி
குளிர்ந்த நிழலுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது
அவளது தந்தை
அவளுக்காக நிழலைக் கொணராது
சூரியனோடு வீடு வந்து சேர்ந்திருந்தார்

ஏதோவொரு குளிர்நாளில்
குளிர்ந்த காற்றில் விறைத்தவளாய்
கதகதப்பான சூரியனுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது
அவளது தாய்
அவளுக்காக சூரியனைக் கொணராது
நிழலுடன் வந்திருந்தாள்

ஒருபோதும் என்னிடமிருந்து
சரியான பதிலைப் பெறாத அவள்
கேள்விகள் பளபளக்கும் தன் கண்களால்
என்னை ஒரு பார்வை பார்த்தாள்

எப்பொழுதுமே என்னைச் சந்தேகிக்கும்
அவளை வியந்தேன்
நான் ஒரு ஆசிரியர்
அவளுக்குக் கற்பித்துக்கொண்டுமிருக்கிறேன்

Not out

07 மார்ச், 2012

சித்தாந்தன்

சில தினங்களுக்கு முன் தோனி படம் பார்க்கக் கிடைத்தது. படம் பார்க்கும் போது நானும் நண்பர் சத்தியபாலனும் முன்பொரு தடவை உரையாடிய விடயங்கள்தான் நினைவுக்கு வந்தன. கடந்த வருடத்திற்கு முதல் வருடம் சத்தியபாலனுக்குத் தெரிந்த பிள்ளையொன்று துhக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டாள். அது பற்றிய தன் மனவேதனையை அவர் என்னுடன் பகிர்ந்திருந்தார். தற்கொலைக்கான காரணம் தான் மிகவும் வேதனை தருவதாக இருந்தது. க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேற்றில் அந்தப் பிள்ளையால் தேற முடியவில்லை அதற்காக பெற்றோர்கள் பிள்ளையை பேசியிருக்கின்றார்கள். அதைத் தாங்க முடியாததால்த்தான் பிள்ளை தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார். ஏனைய பாடங்களில் நல்ல பெறுபேற்றினைப் பெற்றுள்ள போதும் கணித பாடத்தில் பிள்ளையால் சித்தியடைய முடியாமல் போயிருந்தது.

பாடத்திட்டங்களிலும் கல்வி முறையிலும் உள்ள குறைபாடுகளுக்காக பிள்ளைகள் தற்கொலை வரைக்கும் செல்லும் நிலை காணப்படுவது மிகவும் துயரமானது. கணித பாடத்தில் ஒரு மாணவர் சித்தியடையவில்லை என்றால் அவர்களுக்கு கற்றலுக்கான வேறு துறைகள் திறக்கப்படாதா? ஏல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்த மாணவரால் கணித பாடத்தில் சித்தியடைய முடியவில்லை. அதற்காக அவன் மேற்கொண்டு கற்பதற்கு அரச கல்வியமைப்பு என்ன திட்டத்தை கொண்டிருக்கின்றது? என்ற கேள்விகள் எங்கள் உரையாடலின் அடிப்படைகளாக இருந்தன. கலைப்பிரிவில் கல்வி கற்பதற்கு ஏன் ஒரு மாணவர்; கணித பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும். மாணவர் தமது துறையாக விஞ்ஞானத்தையோ கணிதத்தையோ தேர்வு செய்வானாக இருந்தால் அது பிரச்சினைக்குரியதுதான். ஆனால் கலைப்பிரிவில் கற்பதற்கு அடிப்படையான கணித அறிவே போதும், மாணவர்கள் அதிலும் தமக்குத் தகுந்ததான பாடங்களைத் தெரிவு செய்ய முடியும். இதனால் க.பொ. த சாதாரண தரத்துடன் பாடசாலையிலிருந்து விலகும் மாணவர்களைத் தடுத்து அவர்களுக்கான கல்வி வாய்ப்பினை வழங்க முடியும். பல்கலைக்கழகத்திற்கு புள்ளி காணாத போது வெளிவாரியாகக் கற்றுப் பட்டத்தைப் பெற முடியும் என்கின்ற போது, ஏன் கா.பொ. த சாதாரண தரத்தில் மாணவர்களை பாடசாலையிலிருந்து விலக வைக்க வேண்டும். எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் தனது க.பொ. த சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்தியடைய முடியாது அந்தப் பரிட்சையை மூன்றாவது தடவைதான் சித்தியடைந்து உயர்தரம் படித்து பல்கலைக்கழகம் சென்றிருக்கின்றார். இ;ப்போது நல்ல ஆசிரியராக இருக்கின்றார்.கணித பாடத்தில் சித்தியடைய முடியாததால் அவர் தன் மூன்று வருடங்களை வீணாக்கியதாக சொல்லி என்னிடம் கவலைப்பட்டிருக்கின்றார்.
கல்வியின் அடிப்படை என்ன? அது பிள்ளைகளுக்கு என்னத்தை கொடுக்க வேண்டும் என்பதற்கான கேள்வி பதிலாகத்தான் தோனி படம் வெளிவந்திருக்கின்றது. இந்தியாவின் கல்வி அமைப்புக்கு மட்டு மல்ல இலங்கையின் கல்வி அமைப்புக்கும் பொருத்தமாக திரைப்படம் அமைந்திருக்கின்றது. கல்வியின் அடிப்படை திறன்களை வளர்ப்பதுதான். மாணவர்களிடம் காணப்படும் திறன்களை இனங்கண்டு அதில் அவர்கள் மிளிர்வதற்கான வழி வகைகளை ஏற்படுத்துவதுதான். இதை ஆரம்ப வகுப்புக்களிலேயே இனங்காணுதல் வேண்டும் ஆனால் எமது கல்வித் திட்டம் பதினொரு வருடங்கள் காத்திருக்கச் சொல்கின்றது. அதிலும் சாதாரண தரப் பரிட்சையில்; சித்தியடைய முடியவில்லை என்றால் மாணவர்களைப் பாடசாலையிலிருந்து துரத்துகின்றது. இது எந்த வகையில் நியாயமானது? இதுதான் தோனி படத்திலும் முன் வைக்கப்படும் அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலையும் படம் சொல்லியிருக்கின்றது. கல்வி பிள்ளைகளுக்குச் சுமையாக அமையக் கூடாது பிள்ளைகள் சுகமாகப் படிக்க வேண்டும். அதற்கு எமது கல்வித்திட்டங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.

பாடசாலைகள் தமது பரிட்சைப் பெறுபேற்று வீதங்களை உயர்த்திக் காட்டுவதற்காக கற்றலில் பின்தங்கிய பிள்ளைகள் என்ற பெயரில் பல பிள்ளைகளை பரிட்சைக்குத் தோற்றுவதைத் தடுக்கின்றன. தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சைக்குச் சென்ற மாணவன் ஓருவனை பரிட்சைக்குத் தோற்ற விடாது வகுப்பறையில் பு+ட்டி வைத்த சம்பவம் யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலையில் நடந்திருக்கின்றது. காரணம் பிள்ளை பின்தங்கிய பிள்ளையாம். இந்த பின்தங்கிய பிள்ளைக்கு பரிட்சையில் தோற்றுவதற்கான உரிமையிருந்தும் புறக்கணிப்பு நிகழ்ந்திருக்கின்றது. இதை விட அண்மையில் யாழ்ப்பாண பத்திரிகையொன்றில் கற்றலில் பின்தங்கிய பிள்ளைகள் என்ற பெயரில் சில பிள்ளைகளை பிரபல ஆரம்பக் கல்வி ஒன்றின் அதிபா; வேறு பாடசாலைக்கு மாற்றும் படி பெற்றோரை வற்புறுத்தியதாகவும் செய்தி வெளியாகியிருந்தது. காரணம் புலமைப் பரிட்சைப் பரிட்சையில் தங்கள் பாடசாலையின் சித்தி வீதம் குறைந்துவிடும் என்பதற்காக. தோனி படத்தில் பிரகாஸ்ராஜ் ஒரு கட்டத்தில் பேசுவார்” பாடசாலைகள் ஒரு பக்கம் நுhறு வீத சித்தியைக் காட்டிக் கொண்டிருக்கிற நேரம் பரிட்சை பெறுபேறு போதாத பிள்ளைகளும் தற்கொலை செய்துகொண்டுதானிருக்கிறார்கள். இரண்டும் பத்திரிகைகளில் ஒரே நாட் செய்தியாகவே வெளிவருகின்றன” என்று. யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய கலாசாரம் ஒன்று மேலோங்கி வருகின்றது. சித்தியடைந்த பிள்ளைகளுக்கு வாழ்த்தினை பத்தரிகைகளில் பிரசுரிப்பது. வுhழ்த்னை அப்பா அம்மா சகோர சகோதரிகள் மாமா மாமி மச்சன் என்றெல்லாம் போடுகின்றார்கள். பத்திரிகைகளும் வாழ்த்துக்களால் சம்பாதிக்கின்றன. இதே பத்தரிகைகள் தான் தற்கொலைச் செய்திகளையும் அலசி ஆராய்கின்றன. இநதப் பத்திரிகைகளுக்குத் தெரிவதில்லையா இந்த தற்கொலைகளின் பின்னணியில் தங்களுக்கும் பங்குண்டு என்பதை. வுhழ்த்துச் செய்திகளால் மகிழும் பிள்ளைகள் ஒரு புறம். தன் பிள்ளை பரிட்சையில் சித்தியடையவில்லை சித்தியடைந்திருந்தால் தன்பிள்ளையின் படமும் பத்திரிகையில் வந்திருக்குமே என்று மனநோகும் பெற்றோரும் அதனால் தங்கள் பிள்ளைகளை திட்டி மனஉளைச்சலை பிள்ளைகளுக்கு ஏற்படுத்துவதும் நடந்து கொண்டுதானிருக்கின்றது.
புpள்ளைகளின் மனநிலை அவர்களின் உலகத்தின் கற்பனைகள் என்பவை பற்றியும் நாங்கள் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த பரீட்சை மையக் கல்வி அதற்குப் பல வழிகளிலும் தடையாக அமைகின்றது. பிள்ளையின் ஆளுமையை மேலும் மேலும் சிதைப்பதையே அது தன் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. எமது பல்கலைக் கழகங்களும் பாடசாலைகள் போலவே இயங்குகின்றன. தான் முதலாம் வகுப்பில் சந்தித்த ஆசிரியருக்கும் தான் பல்கலைக் கழகத்தில் சந்தித்த விரிவுரையாளருக்கும் வேறுபாடேயில்லை என்கிறார் நண்பர் ஒருவர். ஆதற்கு அவர் சொல்லும் காரணம் முதலாம் வகுப்பு ஆசிரியரும் தான் சொல்வதைத்தான் நான் செய்ய வேண்டும் என்று சொல்லுவார். பல்கலைக்கழக விரிவுரையாளரும் தான் சொல்லுற மாதிரித்தான் எதையும் எழுத வேணும் என்கின்றார். இந்த வார்த்தைகளின் அடிப்படையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எங்கள் கல்வி முறை மரபுவழிச் சிந்தனை முறைகளிலிருந்து இன்னும் மாறவில்லை என்பதுதான். புதிய புதிய பாடங்களை அறிமுகப்படுத்துமளவுக்கு செயற்பாடுகளை மாற்றியமைப்பதில்லை. இது பெருங்குறைபாடாகவேயிருக்கின்றது. ஆசிரியனை தன் சுய சிந்தனைகளின் அடிப்படையில் இயங்க கல்வித்துறை சார்ந்தவர்கள் அனுமதிப்பதில்லை. ஒரு ஆசிரியனின் வாண்மை விருத்திக்கான சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருடன் ஒப்பிடும் போது ஆசிரியரின் இடத்தனை இலகுவாக மதிப்பிட முடியும். இவையெல்லாம் கல்விப் புலம் சார்ந்தவர்கள் சிந்திக்க வேண்டியவை.
தோனி படம் மாணவர்களின் நிலையிலிருந்து சிந்திக்கின்ற படம். மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு எமது கல்வித்திட்டம் எந்த வகையில் பாதகமாக அமைந்திருக்கின்றது என்பதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றது. படத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று பிள்ளைகளுக்குக் கல்வி சுகமாக அமைய வேண்டுமே தவிர சுமையாக அமையக்கூடாது என்பதுதான். நடுத்தரக் குடும்பங்களின் பெற்றோர்கள் பிள்ளைகளைப் படிப்பிப்பதற்குப் படும் வேதனைகளையும் சவால்களையும் படம் தெளிவாக முன்னகர்த்திச் செல்லுகின்றது. பாத்திரங்கள் சிறந்த முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு பிள்ளைகளும் சிறப்பாக நடித்திருக்கின்றார்கள். கந்து வட்டி அறவிடுபவனாக வரும் பாத்திரம் மனிதத் தன்மையின் உச்சமாக காட்டப்படுகின்றது. அயல்வீட்டில் வாழும் பெண் பாத்திரம் சமூக யதார்த்தத்தின் உண்மை முகமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றது. பிரகாஷ்ராஜின் தேர்ந்த நடிப்பு ஒரு தந்தையின் பரிதவிப்பின் யையறு நிலைகளையும் பு+ரிப்புக்களையும் இயல்பாக கொண்டு வந்திருக்கின்றது.

கல்வித் துறையில் இயங்குபவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என யாவரும் பார்க்க வேண்டிய படம்.

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்