(Multiple selerosis நோயால் வருந்தும் சபிதாவுக்கு)

மலையாள மூலம், ஆங்கிலத்தில்- k. சச்சிதானந்தன்
தமிழில்- சித்தாந்தன்
எனது முப்பது வயது மகளை
மீண்டும் ஆறுமாதக் குழந்தையாய்ப் பார்க்கின்றேன்
அவளை நீராட்டுகிறேன்.
முப்பது வருடத்து
துhசிகளையும் அழுக்குகளையும் கழுவுகின்றேன்.
அவள் இப்பொழுது
ஒளிவிடும் சிறிய ‘அமிச்சை’க் கவிதையாய்
சுவர்க்கத்தின் திரவமெனச் சுடருகிறாள்.
சிறிய துவாய்
காலத்தின் ஈரத்தால் நனைகிறது.
பீதோவன்
மேலான தன் மனிதக் கரங்களால்
யன்னல் கம்பிகளை
பியானோ இசைக் குறிப்புகளாக மாற்றுகின்றான்.
எனது மகள்
சிம்பொனி இசையிலிருந்து
தன் மென்மையான றோசாக் கரங்களால்
என்னைத் தழுவ எழுந்து வருகிறாள்.
வெளியே ‘பிஹாக்’ இசையாய் மழை
கிசோறி அமொன்கர்.