சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

“விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமற்றவர்கள்”

25 ஏப்ரல், 2013


‘மகுடம’; இதழ்-3 வெளிவந்த இராகவனின் நேர்காணலில் குறிப்பிடப்படும் சில கருத்துக்களுக்கு எதிர்வினையாக மகுடம் இதழ்-4  நான் எழுதிய கடிதத்தினை இங்கு பதிவிடுகின்றேன். இக்கடிதத்திற்கு “விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமற்றவர்கள்” என மகுடம் ஆசிரியர் தலைப்பிட்டுள்ளார்.

ரு மனிதன் நூறு விதம் எந்தளவுக்கு மனிதனாக இருக்க முடியும் என்பது கேள்விக்குரியது. சராசரி மனிதனையும் ஒரு படைப்பாளியையும் வேறுபடுத்துவது படைப்பாக்கத் திறன் மட்டுமே. மற்றப்படி ஒரு மனிதனை விளங்கிக் கொள்வதென்பது. அவரவரிடம் காணப்படும் பண்புகளோடுதான். 

அ. யேசுராசா அவர்கள் அதிதமான தனிநபர் ஒழுக்கத்தை நிறுவ எத்தணிப்பவர். யேசுராசாவைப் பிறர் புரிந்து கொள்வதென்பது ஒரு மனிதனைப் புரிவது என்ற அடிப்படையில் நோக்க வேண்டுமே தவிர ஒரு மகாத்மாவைப் (காந்தியை நான் குறிப்பிடவில்லை) புரிவது என்ற அடிப்படையிலல்ல. இந்த அடிப்டைப் புரிதலோடே நான் எப்போதும் யேசுராசாவை அணுகுகின்றேன். கருத்தியல் சார்ந்து அவருக்கும் எனக்கும் முரண்கள் உள்ளபோதும்,அவரின் ஆளுமையின் மீது மிகவும் மதிப்புடையவனாக இருக்கின்றேன். கருத்தியல் சார்ந்து யாரையும் யாருக்கும் விமர்சிக்கும் உரிமையிருக்கின்றது. ஆனால் ஒரு தனிமனிதனின் கடந்த காலத்தைக் குறிப்பாக அந்தரங்கமான விடையங்களைப் பொதுத்தளத்துக்குக் கொண்டுவந்து விமர்சிக்கும் போது அல்லது புனைவாக்கும் போது படைப்பாளிக்கு இருக்க வேண்டிய  தார்மீகமான பொறுப்;பை  விளங்கிக் கொள்ள வேண்டும். 

யேசுராசா என்னும் தனி மனிதனின் வாழ்வு பொதுவெளியில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக இருக்குமெனில் அவரின் தனிமனிதப் பிரச்சினைகளை பொதுத்தளத்தில் விமர்சிப்பதும் கேள்விக்குள்ளாக்குவதும் தவறானதல்ல. மாறாக அவரின் தனிப்பட்ட வாழ்வு பொதுவெளியில் எத்தகைய பிரச்சினைகளை ஏற்றபடுத்தியுள்ளது என்பதே எனது கேள்வி? இராகவனின் ‘மனுபுத்திரனின் எழுத்துலகம்’ கதையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அது உண்மையில் எழுதப்பட வேண்டிய கதை. ஒரு சமூக நிறுவனத்தின் அங்கத்தவராக இருக்கும் ஒருவர் செய்யும் கீழ்த்தனமான செயல்களை அக்கதை வெளிக்கொணருகின்றது. ஆனால் இராகவனால் எழுதப்பட்டு கணையாழி இதழில் வெளிவந்த ‘யேசுகாவியம்’ என்னும் புனைவை அத்தகையதாகக் கொள்ளமுடியவில்லை. அது தனிநபர் காழ்ப்புணர்வின் மையத்திலிருந்து நீளும் புனைவு. இப் புனைவில் வக்கிரமும் வசைபாடுதலுமே மேலோங்கி நிற்கின்றது.

யேசுகாவியம் புனைவை யேசுராசாவை முன்நிறுத்திப் படிப்பதைத் தவிர்க்க வேண்டும் என இராகவன் பலரிடமும் கூறியிருக்கின்றார்.(நேர்காணலில் யேசுராசாவைப் பற்றி ஒரு காவியமே எழுதப் போவதாக துவாசகனுக்குக் குறிப்பிட்டுமுள்ளார்) ஆனால் யேசுராசாவைத் தெரிந்த ஒருவர் யேசுராசாவை முன்நிறுத்தாமல் படிப்பதென்பது சாத்தியமாகுமா?
‘ஒரு பிரதிக்கு நிலையான அர்த்தமோ வாசிப்போ இருக்க முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதேவேளை புனைவுவெளி என்பது பல ஊகங்களின் வழி ஒரு மையத்தை நோக்கிக் குவியும் சாத்தியத்தையும் கொண்டிருக்கின்றது.’

எனது இக்கூற்று சாத்தியமற்றது எனில் துவாரகனோ இராகவனோ குறிப்பிடுவது போல காலத்தில் வந்த யேசுராசாவின் கவிதையில் வரும் “இரட்டைமுகக்குஞ்சுகள்” என்பது துவாரகனையோ இராகவனையோ ஹரிஹரசர்மாவையோ குறிப்பிடுவதாகக் கருதுவதும் சாத்தியமற்றதே. ஆதலால் தங்கள் மீது யேசுராசா வசை கூறுவதாக நினைத்துக் கொண்டு தாங்களும் வசை கூறுதலையே செய்திருக்கின்றனர். ஒருவரின் வாழ்வை குறிப்பாக அந்தரங்கங்களை எழுதுவதாக இருந்தால் இராகவனின் வாழ்க்கையையும் துவாரகனின் வாழ்க்கையையும் கூட எழுத முடியும். அதற்கு புனைவு என்ற பெயரைச் சுட்டி தப்பித்துக் கொள்ளக்கூட முடியும். எனினும் அது வக்கிர நோயால் விளையும் ஒரு புனைவுச் செயலாக அமைந்துவிடும் அபாயமே அதிகமும் இருக்கின்றது.

இராகவன் தனது புனைவிலும்(யேசுகாவியம்) நேர்காணலிலும் என்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மறுபாதி இதழையும் குழுமத்தையும் தொடர்புபடுத்தியிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாலும் அவ்வாறு கருதுவதற்கான இடமிருப்பதாலும்( தனது புனைவில் மறுபாதி என்பதை மறைபாதி என்று பயன்படுத்தியிருக்கின்றார்) சில விளக்கங்களை அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கின்றது. யேசுராசா எமக்குக் கவிதை ஒன்றினை அனுப்பியிருந்ததும் அதனை நாங்கள் பிரசுரிக்காதுவிட்டதும் உண்மையே. ஆயினும் அவர் எமக்கு அனுப்பிய கவிதை வேறு காலம் இதழில் வெளிவந்த கவிதை வேறு. எமக்கு அனுப்பிய கவிதை பின்னர் ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மணற்கேணி இதழில் வெளிவந்திருந்தது. 

இலக்கியச்சூழலில் ஒரு படைப்பை ஒரு இதழுக்கு அனுப்புவதும் அதை இதழ்கள் நிராகரிப்பதும் இயல்பானதே அதை ஒருவரை இழிவுபடுத்துவதற்கும் அவரின் படைப்பாக்கத் திறன் மீது கேள்வி எழுப்புவதற்கும் பயன்படுத்துவது எந்தளவுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பது புரியவில்லை. இராகவன் எழுதிய புனைவுகள் எல்லாமே பத்திரிகைகள் சஞ்சிகைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளனவா? எதுவுமே நிராகரிக்கப்பட்டதில்லையா? ஏன் மனுபுத்திரனின் எழுத்துலகம் புனைவை முதலில் பெருவெளி இதழுக்கே அனுப்பியதாகவும் அவ்விதழ் அதனை பிரசுரிக்க இயலாதுள்ளது என்று கூறியதால் உயிர்நிழலுக்கு அனுப்பியதாகவும் அவரே நேர்காணலில் குறிப்பிடுகின்றார். பெருவெளி ஏன் அக்கதையை பிரசுரிக்கவில்லை? அந்தப்புனைவு சிறுபிள்ளைத்தனமானதாக இருந்ததா? இராகவனுக்கு ஏற்றபட்ட அதே அனுபவந்தான் யேசுராசாவுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அப்படியாயின் இராகவனின் படைப்பாக்கம் மீதும் கேள்வியை எழுப்பவும் அவரை இழிவுபடுத்தும் நோக்கிலும் இச்சம்பவத்தையும் பயன்படுத்த முடியும். தனக்குத் தனக்கென்றால் சுழகு படக்குப்படக்கென்று அடிக்குமாம் என்ற பழமொழி இந்த இடத்தில் இராகவனுக்கும் கச்சிதமாகப் பொருந்தி வருகின்றது.

ஒரு சஞ்சிகையை வெளிக்கொணரும் போது பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்pன்றது. இதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் பல நல்ல படைப்புக்களைக் கூட நிராகரிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. இதற்கு மறுபாதி சார்ந்த எனது அனுபவம் ஒன்றினையே என்னால் சொல்ல முடியும். நண்பர் அஸ்வகோஸிடமிருந்து ஒரு கவிதையினை மறுபாதிக்காகக் கேட்டுப்பெற்றிருந்தோம். ஆனால் அன்றை சூழலில் அக்கவிதையினை மறுபாதியில் பிரசுரிக்க முடியவில்லை. அக்கவிதை பின்னர் பொங்குதமிழ் இணையதளத்தில் வெளிவந்திருந்தது. எம்மால் பிரசுரிக்கப்படவில்லை என்பதற்காக அக்கவிதை தரமற்றதாகிவிடுமா? இந்த இயல்பான விடயங்களைக் கூட புரிந்துகொள்ளாமல் இருப்பது ஒரு படைப்பிலக்கியவாதிக்குப் பொருத்தமானதில்லை.

இராகவன் தனது புனைவிலும் நேர்காணலிலும் எம்மை ஒரு துணைக்கூறாகப் பயன்படுத்தி யேசுராசா மீதான தன் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கினறார் என்பது புலனாகின்றது. பிறரை விமர்சனம் செய்பவர்கள் தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையான புரிதல் இல்லாத எவரும் பிறர்மீதோ பிறரின் படைப்புக்கள் மீதோ விமர்சனத்தை முன்வைப்பது நியாயமற்றது. யேசுராசாவும் இராகவனும் இந்த அடிப்படையான மனோபாவம் அற்றவர்கள் என்பதே என் முடிவாகும்.

-சித்தாந்தன்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்