சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

காலத்தின் பிரதியாக கவிதை

26 மார்ச், 2016


சித்தாந்தன்

நிகழ்காலத்தின் பிரதியாக இருக்கும் கவிதை, எவ்வாறு கடந்த காலத்தினதும் எதிர்காலத்தினதும் சான்றாகச் செயற்படுகின்றது என்பதை கோட்பாட்டு நிலையில் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. கவிதையில் 'காலம்' என்ற பிரக்ஞை எந்தளவுக்கு அர்த்தபு+ர்வமாக முழுமை பெறுகின் றது. கவிதையில் எதிர்காலம் என்பது ஒரு அதி புனைவாகவேபடுகின்றது. அதாவது மாய யதார்த்தத்தின் மீது நுட்பமாகக் கட்டமைக்கப்படும் சொல்லடுக்காகும். ஒரு கவிஞன் ஒரு போதும் தீர்க்கதரிசியாக முடியாது. ஆனால் அவன் தீர்க்கதரிசனமான வரிகளை எழுதியவனாகக் கொண்டாடப் படுகின்றான். புனைவில்/ கவிதையில் இழையோடும் அருவமனம் காணும் கனவு, சில வேளைகளில் எதிர்பார்க்கையாக ஒலிக்கின்றது. உண்மையில் இது ஒரு வாய்ப்புப் பார்க்கும் சந்தர்ப்பமே. எதிர்பார்க்கை பலிக்கும் போது கவிஞன் உன்னதமாக்கப்பட்டுக் கொண்டாடப்படுகின்றான்.

கவிஞன் தன் எதிர்பார்க்கையை தன் ஆழ்மனத்தின் விருப்பு வெறுப்புக்கமையவே கட்டமைக்கின்றான். தான் சார்ந்த சமூக, அரசியல், அமைப்பு என்ற வகையில் இது பெரும்பாலும் அமைந்துவிடுகின்றது.
நிலாந்தன், தன் மண்பட்டினங்கள் தொகுதியில் இவ்வாறு எழுதுகின்றார்.

அன்பான பெருங்கடலும்
ஆதரித்த பெருங்காடும்
இறுமாந்திருக்கும் ஒரு நாளிலே
சில தீர்க்கதரிசிகள் மட்டும்
தெரிந்து வைத்திருக்கும்
ஒரு நாளிலே

யாழ்ப்பாணமே!!.!! யாழ்ப்பாணமே
நீ உனது
தலைநகரிற்குத் திரும்பிச் செல்வாய்
கிளிநொச்சியே!!. !! மணலாறே
நீ உனது
தலைநகரிற்குத் திரும்பிச் செல்வாய்

(மண்பட்டினங்கள்)

ஓட்டமாவடி அறபாத், தனது 'வேட்டைக்குப் பின்' தொகுதியில்
வரி தந்தோம் (தருகிறோம்)
நீவீர்பயந்தொதுங்கி வந்தபோது
இடம் தந்தோம்.
உயிர் தந்து விடுதலைக்காய்
உருக்குலைந்தோம்
எமக்கென நீர் எது தந்தீர்
வீரர்காள்
இதோ
அநீதி இழைக்கப்பட்ட
என்னினத்தானின் சாபம்
உமை நோக்கி எழுகிறது.
நிச்சயம் ஓர்நாள் அது
உம் விடுதலையை பொசுக்கும்.”

(சாபம்)

என எழுதுகின்றார். இது இரண்டும் இருவகையான எதிர்பார்க்கைகள். இரண்டுமே இருவரது மனநிலை சாh;ந்த எதிர்பார்க்கைகள். நிலாந்தன், தன் நம்பிக்கைகளின் வழி கட்டமைக்கும் எதிர்பார்க்கையும் அறபாத், ஏமாற்றங் களின் வழி கட்டமைக்கும் எதிர்பார்க்கையும் இருவேறானவை. அறபாத் ஒரு வகையில் சாபத்தின் குரலில் அந்த வரிகளை எழுதியிருக் கின்றார். அறபாத், தான் அறமெனக் கருதுபவை மீது கட்டமைத்திருக்கும் வரிகளவை. ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சி அறபாத்தின் எதிர்பார்க்கை பலித்துவிட்டதாகக் கருத இடந்தருகின்றது.

 நிலாந்தனின் கவிதையில் எதிர்பார்க்கை பொய்த்துவிடுகின்றது. கட்டமைக் கப்பட்ட நம்பிக்கைகள் உடைந்து சிதறும் போது நம்பிக்கையீனத்தின் பெருவெளியில் கவிஞனின் வார்த்தைகளே எரிநட்சத்திரங்களாக உதிர்கின்றன. நிலாந்தனின் நம்பிக்கை அவரின் ஆழ்மனத்தின் விருப்பினடியாக உருப்பெற்றது. எனினும் வீழ்ச்சி என்பது அவரின் அகவிருப்புக்கு அப்பாற்பட்டது.

கவிதையில் அகவிருப்புக்கு அப்பாற்பட்ட காரணிகளின் தாக்கம் எப்படிச் செல்வாக்குச் செலுத்துகின்றதென்பது கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று. உண்மையில் நிலாந்தன், அறபாத்  இருவரின் கவிதைகளிலும் அக விருப்பின் கூறுகளே மேலோங்கி நின்றபோதும், நிலாந்தனின் கவிதையில் அது பொய்த்துப்போய் விடுகின்றது. ஆனாலும் கவிதை கவிதையாகவே தன்னை நிலைநிறுத்தியிருக்கின்றது. அது நிகழ்காலம் சார்ந்த அகவிருப்பின் கவிதை. அது நிகழ்காலத்தின் கூறுகளையே பிரதிபலிக்கின்றது. கவிதை காலத்தின் திரண்ட வடிவமாக அல்லது காலத்தின் பிரதியாக தன்னைப் பிரகடனம் செய்யும் போது, காலத்தின் அருவக் குணங்களையும் காலத்தின் தோற்ற நிலைகளையும் தவிர்க்க முடியாது உள்வாங்கிவிடுகின்றது. இது கவிதையில் தவிர்க்க முடியாமல் நிகழும் ஒரு வகையான வேதியல் மாற்றந்தான்.

கவிதையின் பிரத்தியேகமான கூறுகளில் ஒன்று, அதன் அருவ அசைவாகும். சொற்களின் வீரியம் துருத்தும் இடங்களிலும் அமிழும் தருணங்களிலும் கவிதை மொழியின் உச்சமான கலையை நிகழ்த்துகின்றது. கவிதையை, கோட்பாட்டின் சட்டங்களால் சிறைப்படுத்தும்போது, அறிவின் தலையீடு அதிகமும் நிகழுகின்றது. யதார்த்தம், மீயதார்த்தம்  அல்லது அதியதார்த்தம் போன்ற சொல்லாடல்கள் யாவுமே கவிதைக்குப் புறம்பாக நிகழும் அறிவுச் செயற்பாடுகளேயாகும். ஆனால் கவிதை வாசிப்பு என்பது கவிதையின் அகவழி நிகழ்வது அது ஒத்த அல்லது நேரான அல்லது முற்றிலும் மாறுபட்ட, எதிரான அனுபவங்களாலானது. இது கவிஞனுக்கும் வாசகருக்கும் இடையிலான அருவத்தொடர்பின் வழி நிகழ்வது. தவிரவும் கவிஞனுக்கும் சமூகத்துக்குமான இருப்பின் ஊடாட்ட விளைவும் இதுதான். இதனால்தான் 'மகாகவிஎன கொண்டாடப்படுவோரின் கவிதைகளுக்கு தீர்க்க தரிசன முலாம் பு+சப்படுகின்றது.

கவிதை உட்பட எந்த இலக்கியப்பிரதிக்கும் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம் என்ற ஒன்றில்லை. இலக்கியத்துக்கு அது சாத்தியமும் இல்லை. தேவையுமில்லை. அதனால்தான் இலக்கியங்களில் மீறல்கள் சாத்தியமா கின்றன. காலத்தின் பிரதிகளாக இயங்கும் இலக்கியப்பிரதிகள் காலத்தை மீறி நிற்பதற்கு அது, தன்னை நிகழ்காலத்தின் பிரதியாக பேணுவதற்கான சாத்தியங்களுக்கு இடம் வழங்குவதேயாகும். நிகழ்காலத்தின் பிரச்சினை கள் கடந்த காலத்தின் நீட்சியாக அமையும் போது, அப்பிரச் சினைகளைப் பேசும் இலக்கியங்களும் நிகழ்காலத்தின் பிரதிகளாகின்றன. கவிதை நிகழ்காலத்தின் ஜீவிதமாகவே எப்போதும் இருந்துவிடுகின்றது.
                                                                                                          
00

'ஆதிரை' - துயரத்தை வலிந்து புனையும் பிரதியா?

06 மார்ச், 2016


சித்தாந்தன் சபாபதி
அண்மையில் சயந்தனின் ஆதிரை நாவல் குறித்த உரையாடல் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது. திறந்த உரையாடற் களமாக நிகழ்ந்த இந் நிகழ்வில் ஆதிரை நாவலின் அனுபவம் என்ற சாரத்தில் தமிழ்க் கவி உரையாடலை நிகழ்த்தினார்.
அவா் தனது உரையில் ”சயந்தன் இந்த நாவலை ஏலவே எழுதிமுடித்து தமிழினிக்கு அனுப்பியதாகவும், அதனை வாசித்து விட்டு பதிப்பாளா் வசந்தகுமார், நாவலில் துயரம் போதுமானதாக வரவில்லை. திருத்தி எழுதிவிட்டு தாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டதாகவும். அதனால் நாவல் பின்னா் இரண்டு மாதங்கள் தாமதித்தே அச்சிடப்பட்டதாகவும் ” தெரிவித்திருந்தார். மேலதிக தகவலாக “தமிழினி வசந்தகுமார், சோகம் படிந்த பிரதிகளையே விரும்புவதாகவும்“ குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய இந்த உரை உண்மையான பதிவாக இருந்தால், ஆதிரை மற்றும் தமிழ்க் கவியின் ஊழிக்காலம் ஆகிய நாவல்கள் வலிந்து துயரத்தை உருவாக்கிய நாவல்களாகவே கருத முடியும். ”ஊழிக்காலம் பெரும்பாலும் உண்மைகளை அடைப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது“ என்ற நிலாந்தனின் கருத்து மீதும் சந்தேகத்தையே ஏற்படுத்தும்.
தமிழ் படைப்புச்சூழல் என்பது குறிப்பாக ஈழத்துப் படைப்புக்களை பதிப்பிக்கும் தமிழக பதிப்பகங்கள் இத்தகையதான ஒருவித மனநிலையைக் கொண்டிருக்கின்றனவா? ஏனெனில் யுத்தத்தின் பின்னான பெரும்பாலும் தமிழகப் பதிப்பகங்களால் வெளியிடப்பட்ட ஈழம் சார்ந்த படைப்புக்கள், துயா் படிந்த காலம் பற்றிய படைப்புக்களாகவே இருக்கின்றன.
ஒரு படைப்பாளி, பதிப்பகங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமையத்தான் தன் படைப்புக்களை எழுத வேண்டுமா? ஒரு பதிப்பாளா் படைப்பின் போக்குப்பற்றி தீா்மானிப்பதற்கான தகுதியாக, அவா் வெளியீட்டாளா் என்ற தகுதி மட்டும் போதுமானதா? அப்படியாயின் படைப்பாளியின் சுயம் என்பது என்ன?
ஈழத்தமிழரின் துயரத்தை வைத்து அரசியல் நடாத்தும் தமிழக அரசியல் வாதிகளுக்கும் ஈழத்து படைப்புக்கள் துயரத்தையே உள்ளீடாகக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் பதிப்பாளா்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்க முடியும்.
ஒரு படைப்பின் பிரதான தீா்மானிப்பாளா் படைப்பாளராகத்தான் இருக்க முடியும் என நான் நம்புகின்றேன். பெரும் பதிப்பகங்களின் ஆதரவுத் தளத்தில் நின்று கொண்டு அவற்றிடம் படைப்புப் பற்றியதான தீா்மானிக்கும் சக்தியை வழங்குவதை விட்டு, படைப்பாளா்கள் தமது சுயத்தை பேணுகின்ற வகையிலான மாற்றுப் படைப்புச் சூழலை உருவாக்க முடியாதிருப்பது படைப்பாளா்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துயர நிலை என்றுதான் கூற வேண்டும்.
தமிழ்க் கவியின் ஊழிக்காலம் ஒரு அனுபவப் பதிவு மட்டுமே. அதனது காலவெளி மிகவும் குறுகியது. தன்னனுவங்களின் பதிவுகளுக்கிடையில் அவா் தான்சார்ந்த ஒரு கருத்துநிலையை கட்டமைக்க விளைகின்றார். அதனை ஒரு பொதுவான உண்மையென்றோ அல்லது அதைத்தான் உண்மை என்றோ கருதவேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் அது பொய்யும் புனைவும் நிரம்பிய பிரதியென்று நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அது தமிழ்க் கவியின் அரசியல், விருப்பு வெறுப்பு சார்ந்த பிரதி. அதை எழுதுவதற்கு அவருக்கு உரிமையுண்டு. அந்தப் பிரதியின் பலம் பலவீனங்களையும் உண்மை, பொய் பற்றியும் உரையாடுவதற்கும் வாசகநிலையிலும் உரிமையுண்டு. நிலாந்தனது உரையில் “பெரும்மாலும் மெய்த்தகவல்களை“ ஊழிக்காலம் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். ”பெரும்பாலும்“ என்ற இந்த சொல்லாடலே இந்தப் பிரதி பற்றியதான வாசிப்பின் பரந்த வெளியைக் கோரிநிற்கின்றது.
ஆதிரை பரந்த கால விரிவினையுடையது. ஒரு நாவலுக்கான கட்டமைப்பினை சாத்தியமான வரையில் கொண்டிருக்கின்ற பிரதி. முப்பது வருட கால ஈழத்தமிழா் வாழ்க்கையின் அவலத்தை ஓரளவுக்கு பதிவு செய்திருக்கின்ற பிரதி. ஆயினும் ஆதிரையில் போதாமைகள் இருக்கின்றன. ஏலவே உதிரி உதிரியாக எழுதப்பட்ட படைப்புக்களின் பதிவுகளின் ஒரு கூட்டுருவான பிரதியாக அதிருக்கின்றது. ஆதிரையை வாசித்தல் என்பது கடந்த காலத்தை வாசித்தலாகிவிடாது. நிலாந்தன் தனது உரையில்- காலத்தை பதிவு செய்யும் இத்தகைய பிரதிகள் கொண்டிருக்கின்ற போதாமைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். பேசப்படாத அல்லது பகிரப்படாத பக்கங்கள் ஈழப்போராட்டம் சார்ந்து இருக்கின்றமையினால் முழுமையான ஈழத்தமிழா் வரலாற்றை உள்ளடக்கிய பிரதி எப்போதும் சாத்தியமற்றது என்ற பொருள்பட உரையாடலின் போது கூறியிருந்தார். அவரது வாதத்திலும் உண்மை இருக்கின்றது.
ஒரு படைப்பாளி தனக்கிருக்கின்ற சுதந்திரத்தை எழுதுகின்ற போதுமட்டுமே அனுபவிக்க முடிகின்றது. அதனை பிரசுரிக்கும் போது அல்லது பதிப்பிக்கும் போது, சுதந்திரத்தை இழக்க வேண்டி பெரும்பாலும் ஏற்படுகின்றது. தன் கருத்துநிலையை முழுமையான அா்த்தத்தில் பொதுப் பரப்புக்குக் கொண்டுவருவதிலுள்ள சிக்கல்கள் குறித்து நாம் பேசவேண்டியிருக்கின்றது. “இந்தச் சஞ்சிகையில் வரும் படைப்புக்களின் கருத்துக்களுக்கு அதன் படைப்பாளா்களே பொறுப்பு“ எனக் கூறிக்கொண்டு குறித்த படைப்புக்களை தங்களது விருப்பு வெறுப்புக்கமைய மாற்றும் சஞ்சிகைகள் ஈழத்தில் இருக்கின்றன. படைப்புக்களின் கருத்துக்களுக்கு தாம் பொறுப்பல்ல எனக் கூறிக்கொள்ளுபவா்கள் ஏன் படைப்பாளனின் கருத்துக்களைச் சிதைத்தும் அழித்தும் தம் விருப்புக்கமையச் செயற்படுகின்றனா்? தகுதியற்றது அல்லது தங்களின் கருத்துநிலையோடு ஒன்றி வர முடியாதுள்ளது அதனால் பிரசுரிக்க முடியாது என்று சொல்வதில் என்ன சிக்கல் இருக்கின்றது.
இவைகள் படைப்பாளிகள் தங்கள் உரிமைகளை இழக்கின்ற இடங்கள். இவற்றுக்கான மாற்று வெளிகளைக் கண்டடைய வேண்டிய தேவை இருக்கின்றது. பதிப்பகங்களிடம் இழந்து போகும் தனது உரிமைகளை படைப்பாளா்கள் மீட்டெடுப்பது எவ்வாறு? இது பற்றி உரையாடலை தமிழ் பொதுப்பரப்பில் நிகழ்த்த வேண்டிய தேவை இருக்கின்றது.
தற்போது ஈழத்தில் பதிப்புத்துறையை வளா்த்தெடுக்க வேண்டும் என பலரும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு பேசிக்கொண்டிருப்பவா்கள் இவை பற்றியும் கருத்திலெடுத்து உரையாட வேண்டும். பதிப்பு என்பது வெறும் புத்தகமாக்கும் முயற்சியல்ல. என்பதுதான் இதனது அடிப்படை.
ஆதிரை நாவலின் புத்தகமாக்கும் முயற்சி பற்றிய தமிழ்க்கவியின் உரை இந்த உரையாடலைத் தொடங்க காரணமாகியிருக்கின்றது. தமிழ்க் கவிக்கு நன்றிகள்.

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்